உள்ளூர் செய்திகள்

நெல்லை மாநகராட்சி 55-வது வார்டில் சிறுவர் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமிஷனரிடம் கவுன்சிலர் மனு

Published On 2023-01-31 09:20 GMT   |   Update On 2023-01-31 09:20 GMT
  • நெல்லை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
  • தியாகராஜநகர், டி.வி.எஸ். நகர், தாமிரபரணி காலனி உள்ளிட்ட இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்்கு கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

பாளை தியாகராஜநகரை சேர்ந்த சமூக ஆர்வலரான செல்வகுமார் என்பவர் அளித்த மனுவில், தியாகராஜநகர், டி.வி.எஸ். நகர், தாமிரபரணி காலனி உள்ளிட்ட இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே அந்த நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மாநகராட்சி 55- வது வார்டு உறுப்பினர் முத்து சுப்பிரமணியன் அளித்த மனுவில், குமரேசன் நகர் முன்பு சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்த பின்னரும் அங்கு இதுவரை பூங்கா அமைப்பதற்கான நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. எனவே காலம் தாழ்த்தாமல் விரைவில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

Tags:    

Similar News