உள்ளூர் செய்திகள்

நாகூர் தர்காவில் அமைச்சர் செஞ்சு மஸ்தான் பேட்டியளித்தார்.

ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழாவிற்கு அரசு சார்பில் சந்தன மரகட்டைகள் வழங்க நடவடிக்கை

Published On 2023-06-21 09:57 GMT   |   Update On 2023-06-21 09:57 GMT
  • நாகூர் ஆண்டவர் தர்காவில் மராமத்து பணி மேற்கொள்ள தமிழக அரசு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கியது.
  • பணிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கும், யாத்திரிகர்களுக்கும் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் மராமத்து பணி மேற்கொள்ள தமிழக அரசு இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.

இந்த நிலையில் தர்காவில் நடைபெற்று வரும் மராமத்து பணிகள் குறித்து தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது தர்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கும், யாத்திரிகர்களுக்கும் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என நாகூர் தர்கா நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கினார்.

அதனை தொடர்ந்து நாகூர் ஆண்டவர் சன்னதியில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், நாகூர் ஆண்டவருக்கு மலர் போர்வை வழங்கி மலர் தூவி துவா செய்தார்.

மேலும் தர்காவில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்:-

தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு என தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவி களை செய்து வருவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைபட்ட ஹஜ் யாத்திரை தமிழக முதலமைச்சர் முயற்சியால் மீண்டும் தமிழகத்தில் இருந்து தற்போது தொடங்கப்ப ட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் நாகூர் ஆண்டவர் சந்தனக்கூடு விழாவிற்கு சந்தன மரக்கட்டைகள் தமிழக அரசு சார்பில் விலை இல்லாமல் வழங்கப்படுவதாகவும், இதே போல் ஏர்வாடி தர்காவிற்கும் விலை இல்லாமல் சந்தன கட்டைகள் வழங்க நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், நாகூர் ஆண்டவர் தர்கா வழிபாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் புதிய யானை வாங்குவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய யானை வாங்க தமிழக முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News