உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் கலப்பட தேயிலை தூள் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை - வாரிய தலைவர் எச்சரிக்கை

Published On 2023-10-22 09:13 GMT   |   Update On 2023-10-22 09:13 GMT
  • 4 தேயிலை தொழிற்சாலைகளின் உரிமம் 3 மாதத்திற்கு ரத்து
  • உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் 20 ஆலைகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

அருவங்காடு,

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள்கள் தரமாக தயாரிக்க வேண்டும் எனவும், கலப்பட தேயிலை தூள்கள் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மாவட்டம் முழுவதும் கலப்பட தேயிலை தூள் குறித்த விழிப்புணர்வு அவ்வப்போது பொது மக்கள் இடையேயும், தொழிற்சாலை ஊழியர்கள் மத்தியிலும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு தொழிற்சாலையிலும் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூளின் அளவை கண்காணித்து அவ்வப்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இதுபோல் தேயிலை வாரிய உத்தரவை மீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 20 தொழிற்சாலைகளுக்கு சோக்காஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் நான்கு தேயிலை தொழிற்சாலைகளின் உரிமம் மூன்று மாதத்திற்கு மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.

Tags:    

Similar News