நிலக்கோட்டையில் அரசு பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள் அவதி
- சில நாட்களாக திண்டு க்கல்-நிலக்கோட்டைக்கு போதிய அளவு பஸ்கள் இயக்கப்படுவதில்லை.
- ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கும் மாணவ-மாணவிகள் ஆட்டோவில் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டையை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து திண்டுக்கல், வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஏராளமான மாணவ-மாணவிகள் பயணம் செய்து வருகின்ற னர்.
மேலும் அலுவலகம் செல்பவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் அரசு பஸ்களை நம்பி உள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக திண்டு க்கல்-நிலக்கோட்டைக்கு போதிய அளவு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. மேலும் வத்தலக்குண்டு பகுதிக்கும் குறைவான அரசு பஸ் சேவையே உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கும் மாணவ-மாணவிகள் ஆட்டோவில் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழை, எளிய மாணவர்கள் ஆட்டோவிற்கு பணம் இல்லாமல் நண்பர்களிடம் வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை போக்கு வரத்து அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. ஆனால் டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறையால் அரசு பஸ் சேவை பாதிக்கப்பட்ட தாக அவர்கள் தெரி வித்தனர்.
தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் காலை நேரத்தில் அரசு பஸ்களை நம்ப முடியவில்லை. இதனால் தனியார் பஸ் மற்றும் ஆட்டோக்களில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மாணவ-மாணவிகளின் எதிர்காலம் கருதி போதிய அளவு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.