அரசு கல்லூரியின் செயல்பாடுகளை பார்வையிட்ட மாணவர்கள்
- பாடங்கள் குறித்தும் விவரங்கள் செயல் விளக்கமாக மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
- வேலை வாய்ப்பு உள்ள துறையை தேர்வு செய்து பல்வேறு சந்தேகங்களுக்கு பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூர் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் கல்லூரி களப் பயணம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் சசிக்குமார் தலைமை வகித்தார்.
மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஞானசேகரன், தலைமை ஆசிரியை ராணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி, ஆசிரியர் பயிற்றுனர் ஐசக்ஞானராஜ் முன்னிலை வகித்தனர்.
இதில் சீர்காழி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளியில் 12- வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து கல்லூரியில் உள்ள நூலகம், வணிகவியல் துறை, அறிவியல் துறை, கணிதத்துறை வகுப்புகளுக்கு சென்று பாடம் கற்பிக்கும் முறைகள் குறித்தும், பாடங்கள் குறித்தும் விவரங்கள் செயல் விளக்கமாக மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
பள்ளிக்கல்வி நிறைவடைந்து கல்லூரி படிப்பில் எந்த துறையை தேர்வு செய்து படிப்பது.
வேலை வாய்ப்பு உள்ள துறையை தேர்வு செய்து கல்லூரி படிப்பில் சேர்வது உட்பட மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பேராசிரியர்கள் விளக்க ங்கள் அளித்தனர்.
இதில் கல்லூரி பேராசிரியர்கள் நாராயணசாமி, சாந்தி, கார்த்திகா, பிரபாகரன், சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.