உள்ளூர் செய்திகள்

தஞ்சை அருங்காட்சியகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன் ஆய்வு செய்தார்.

தஞ்சை அருங்காட்சியகத்தில் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு

Published On 2023-04-07 09:46 GMT   |   Update On 2023-04-07 09:46 GMT
  • சோழர் கால பொருட்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்.
  • அடிப்படை வசதிகள் எதுவும் செய்ய வேண்டியது இருக்கிறதா?

தஞ்சாவூர்:

தஞ்சை பழைய கலெக்டர் அலுவலகஅருங்காட்சிய கத்தில் மேற்கொள்ள ப்பட்டுள்ள பணிகள் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர், அங்கு வைக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா பாசன பகுதிகளின் மாடல், புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள், சோழர் கால பொருட்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து ராஜாளி பறவை சரணாலயத்திற்கு சென்று அங்குள்ள பறவைகளை பார்வையிட்டு, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்ய வேண்டியது இருக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அவர், தஞ்சை பெரியகோவில் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், தஞ்சை கலைக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News