உள்ளூர் செய்திகள்

மெட்ரோ ரெயில் சுரங்க பணியில் திடீர் வாயு கசிவால் பரபரப்பு- ஆபத்தை ஏற்படுத்துமா? என அதிகாரிகள் ஆய்வு

Published On 2024-11-10 09:45 GMT   |   Update On 2024-11-10 09:46 GMT
  • கலங்கரை விளக்கத்தில் இருந்து திருமயிலை வரையில் பூமிக்கு அடியில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது.
  • மெட்ரோ சுரங்கப் பணிகள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரையில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன்படி கலங்கரை விளக்கத்தில் இருந்து திருமயிலை வரையில் பூமிக்கு அடியில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது.

18 மீட்டர் ஆழத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகள் கச்சேரி சாலை வழியாக சாந்தோம் கிறிஸ்தவ ஆலயத்தை தாண்டி நடைபெற்ற போது மீத்தேன் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

கார்பன் மோனாக்சைடு வாயு கசிவும் ஏற்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அப்பகுதியில் மெட்ரோ சுரங்கப் பணிகள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வாயு கசிவு ஆபத்தை ஏற்படுத்துமா? என்பது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

இதுபற்றி மெட்ரோ அதிகாரிகள் கூறும்போது, இந்த கியாஸ் கசிவு ஆபத்தானது அல்ல என்றும் அதனை சரி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, காற்றில்லா நிலைகளில்தான் எரியும் தன்மை கொண்ட மீத்தேன் உருவாகும். கரிமப் பொருட்கள் ஏற்கனவே இருந்த இடங்களிலேயே மீத்தேன் உருவாக வாய்ப்புகள் உள்ளன.

இப்படி மீத்தேன் இருக்கும் இடத்தில் கார்பன் மோனாக்சைடு வாயு உருவாவதற்கான வாய்ப்புகள் குறைவாகும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த வாயு கசிவு பிரச்சனையை சரிசெய்து மெட்ரோ ரெயில் பணிகளை மீண்டும் தொடங்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

Tags:    

Similar News