கோயம்பேட்டில் தலைமை தேர்தல் அலுவலகம் முன்பு ரெயில்வே ஊழியர்கள் திடீர் போராட்டம்
- எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேர் கைது செய்யப்பட்டனர்.
போரூர்:
சென்னை ஐ.சி.எப்., மற்றும் தெற்கு ரெயில்வேயில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள தலைமை தேர்தல் அலுவலகம் அருகே திரண்டனர். நீண்டகாலமாக பணி நிரந்தரம் செய்யாமல் வடமாநில தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி வழங்குவதாகவும், இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் அவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவும், பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் விதமாக தங்களது வாக்காளர் அட்டைகளையும் திரும்ப ஒப்படைக்க உள்ளதாகவும் கூறி தலைமை தேர்தல் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கோயம்பேடு பஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேர் கைது செய்யப்பட்டனர்.