- 11 விவசாயிகள் குழுவாக இணைந்து ஒருங்கிணைத்து 15 ஏக்கர் நிலத்தில் சூழ் உருவாக்கினர்.
- அரசு மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்வதற்கான மானியமும் வழங்கப்பட உள்ளது.
தஞ்சாவூர்:
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா புதுக்குடி கிராமத்தில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆணைப்படியும், மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் அறிவுறுத்தல்படியும் 11 விவசாயிகள் குழுவாக இணைந்து ஒருங்கிணைத்து 15 ஏக்கர் நிலத்தில் சூழ் உருவாக்கினர்.
இதையடுத்து அங்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இதனை தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் முதன்மை செயலருமான விஜயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து விவசாயிகளுக்கு மாங்கன்று வழங்கினார்.
தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் மூலம் இந்த குழுவுக்கு அரசு மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்வதற்கான மானியமும் வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்தமிழ்செல்வி, தோட்டக்கலை அலுவலர் சோபியா, உதவி ேதாட்டக்கலை அலுவலர் ரகுபதி, கரிகாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.