கீழநத்தம் ஊராட்சியில் மண்புழு உரத்தில் விளைந்த காய்கறிகள் அங்கன்வாடிக்கு வழங்கல்
- மண்புழு இயற்கை உரமிட்டு கீரை, தர்பூசணி மற்றும் காய்கறி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
- அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட கீரை, காய்கறி, பழங்களை அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை:
பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சியில் பசுமை முன்மாதிரி கிராமத்தை உருவாக்கும் முயற்சியில் மக்கும் குப்பைகளை கொண்டு மண்புழு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. மேலும் மண்புழு இயற்கை உரமிட்டு கீரை, தர்பூசணி மற்றும் காய்கறி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட கீரை, காய்கறி, பழங்களை அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவி அனுராதா ரவிமுருகன் கலந்து கொண்டு ஊராட்சிக்கு உட்பட்ட மேலூர், வடக்கூர், கே.டி.சி. நகர் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு நேரடியாக சென்று கீரை, தர்ப்பூசணிகளை வழங்கினார்.
அப்போது ஊராட்சி செயலர் சுபாஷ், வார்டு உறுப்பினர்கள் பலவேசம், இசக்கி பாண்டி, ராஜாமணி, மக்கள் நலப்பணியாளர் மாரியம்மாள், பணித்தள பொறுப்பாளர் சோபனா, அங்கன்வாடி ஆசிரியைகள் சீதாலட்சுமி, ராஜலட்சுமி, களத்தி உதவியாளர்கள் ரோஸ்லின், காவேரி, பாளை மத்திய ஒன்றிய தி.மு.க. ஆதி திராவிடர் நல அணி அமைப்பாளர் செல்லப்பா மற்றும் அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.