உள்ளூர் செய்திகள்

கணக்கெடுக்கும் பணி நடந்தது.

எழுத, படிக்க தெரியாதவர்கள் கணக்கெடுப்பு பணி

Published On 2022-06-17 08:17 GMT   |   Update On 2022-06-17 08:17 GMT
  • கற்றல் இழப்பை சரிசெய்ய இல்லம் தேடி கல்வி மூலம் தன்னார்வலர்களை கொண்டு சுமார் 353 மையங்களில் பயிற்சி நடைபெற்று வருகின்றது.
  • 15 வயது முதல் 35 வயது வரை முழுமையாக எழுத,படிக்க தெரியாதவர்கள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்று வருகின்றது.

சீர்காழி:

கொள்ளிடம் ஒன்றியத்தில் கொரோனா காலத்தில் மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரிசெய்ய இல்லம் தேடி கல்வி மூலம் தன்னார்வலர்களை கொண்டு சுமார் 353 மையங்களில் பயிற்சி நடைபெற்று வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் உத்தரவின் படி 15 வயது முதல் 35 வயது வரை முழுமை யாக எழுத படிக்க தெரியாதவர்கள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்று வருகின்றது. திருமுல்லைவாசல் கடைத்தெரு மற்றும் கடற்கரை பகுதியில் உள்ள மீன் விற்பனை செய்யும் இடத்தில் இதை சார்ந்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இப்பணியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி ஆசிரியர் பயிற்றுநர் ஐசக்ஞானராஜ் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் அருட்செல்வி ஆகியோர் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News