தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பொதுப் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 17-ந் தேதி தொடக்கம்
- தொழில்முறைக் கல்வி பாடப்பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
- கலந்தாய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
கோவை,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டு இளம் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான இணையதள வழி கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின்படி, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.
தொழில்முறைக் கல்வி பாடப்பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு நேற்று தொடங்கியது. நாளை (16-ம் தேதி) வரை நடக்கிறது. இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 18-ம் தேதி நடக்கிறது. பொதுப்பிரிவினருக்கான இணையவழி முதல்கட்ட கலந்தாய்வு வரும் 17-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடக்கிறது.
கலந்தாய்வில் பங்கேற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 20-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடக்கிறது. பொதுப்பிரினருக்கான நகர்வு முறை மற்றும் இணையதள வழி 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 26-ம் தேதி மற்றும் 27-ம் தேதிகளில் நடக்கிறது.
பொதுப்பிரிவில் இணையதள வழி இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 28-ம் தேதி மற்றும் 29-ம் தேதி நடக்கிறது. இணையதள வழி கலந்தாய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.