உள்ளூர் செய்திகள்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-11-25 09:45 GMT   |   Update On 2022-11-25 09:45 GMT
  • போலி வியாபாரிகள் தரமற்ற விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
  • சேமிப்பு கிடங்கு ஏற்பாடு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

அப்போது தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் நிர்வாகிகள் ஏராள மானோர் கலெக்டர் அலுவல கத்துக்கு வந்தனர்.

திடீரென அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, திருவோணம், மதுக்கூர், பட்டுக்கோட்டை மற்றும் வல்லம் பகுதிகளில் எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலை ஆண்டுதோறும் சாகுபடி செய்யப்படுகிறது.

ஆனால் இதற்கான விதை தரமான முறையில் வழங்கப்படவில்லை , போலி வியாபாரிகள் தரமற்ற விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதனை கண்டித்தும், விவசாயிகளுக்கு தரமான விதை சான்று பெற்ற வியாபாரிகள் மட்டும் விற்பனை செய்வதை உறுதி செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு விவசாயிகள் உற்பத்தி செய்யும் நிலக்கடலையை கட்டுப்படியான விலை கிடைத்திடவும், சேமிப்பு கிடங்கு ஏற்பாடு செய்தி டவும் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கொடுத்தனர்.

Tags:    

Similar News