உள்ளூர் செய்திகள்

பணியில் இருக்கும் போலீசார் பயன்படுத்த 10 நடமாடும் கழிப்பறை வாகனங்கள்- தமிழக அரசு ஏற்பாடு

Published On 2023-09-11 07:23 GMT   |   Update On 2023-09-11 07:24 GMT
  • காவலர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க நடமாடும் கழிப்பறை வாகனங்கள் அனுப்பப்பட்டு, போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.
  • 10 நடமாடும் கழிப்பறை வாகனங்களும் தினசரி பயன்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னையில், வி.வி.ஐ.பி.க்கள் வழி பாதுகாப்பு பணி மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு, ஆண் மற்றும் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பணியிலிருக்கும் ஆண் மற்றும் பெண் காவலர்கள், இயற்கை உபாதைகளை கழிக்க நடமாடும் கழிப்பறை வாகனங்கள் அனுப்பப்பட்டு, போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.

சென்னை பெருநகர காவல்துறையின் 4 மண்டலங்களுக்கும் தலா 2 கழிப்பறை வாகனங்கள் என 8 கழிப்பறை வாகனங்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறைக்கு 2 கழிப்பறை வாகனங்கள் என 10 நடமாடும் கழிப்பறை வாகனங்களும் தினசரி பயன்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கழிப்பறை வாகனங்களிலும் 2 இந்தியன் வகை கழிப்பறை, 2 மேற்கத்திய கழிப்பறைகள் என 4 கழிப்பறைகளும், உடை மாற்றுவதற்கு 1 சிறிய அறை, கை கழுவுவதற்கு 2 வாஷ் பேஷின்கள், தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்ள 1 தண்ணீர் தொட்டி, பெண் காவலர்கள் கழிப்பறை வாகனங்களில். 5 ரூபாய் நாணயம் செலுத்தினால் நாப்கின்கள் வழங்கும் எந்திரம், சிறிய குப்பை தொட்டி ஆகியவை பொருத்தப்பட்டு, நல்லமுறையில் இயங்கி வருகிறது. இவைகள் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு கழிப்பறை வாகனம் தினசரி தலைமைச் செயலகத்தில் நிறுத்தப்பட்டு, அங்கு பணிபுரியும் பெண் போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News