உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் 30 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2022-07-02 06:45 GMT   |   Update On 2022-07-02 06:45 GMT
  • பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
  • வெளிமாவட்ட மீனவர்கள் வந்து சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கு எச்சரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த தொழிலை நம்பி சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். இந்த மீனவர்கள் விசைப்படகு, பைபர் படகு, கட்டு மரங்களில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள்.

இதனிடையே கடலில் சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதற்கு ஒருதரப்பை சேர்ந்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். என்றாலும் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் கணடிப்பாக உள்ளதால் சுருக்குமடி வலையை பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே வெளி மாவட்ட மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக கடலூர் மாவட்ட மீனவர்கள் கருதுகிறார்கள். இந்த வலையை பயன்படுத்தினால் மீன்வளம் அழியும் என்று அவர்கள் மாவட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். வெளிமாவட்ட மீனவர்கள் வந்து சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கு எச்சரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

இதனால் பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மீன்பிடி தளங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் மீனவ கிராமங்களில் ஊர்கூட்டம் நடத்த தயாராக உள்ளனர். மேலும் மீனவர்கள் போராட்டத்தால் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க மீனவ கிராமங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News