ஆற்காடு அருகே அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை
- கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டனர். கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர்.
- பீரோவின் பக்கத்தில் வைத்திருந்த ரூ.4 லட்சம் மர்ம கும்பலிடம் இருந்து தப்பியுள்ளது.
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த கணியனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன். அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மனைவி வனிதா. மகள் யுத்திகா வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் நேற்று இரவு இவர்கள் அனைவரும் மாடியில் தூங்கினர்.
இதனை நோட்டமிட்ட மர்மகும்பல் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்து 70 பவுன் நகை, 750 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். வீட்டில் சத்தம் கேட்கவே ஜெகன்நாதன் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன.
இதனைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த நகை, வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டனர். கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீரோவின் பக்கத்தில் வைத்திருந்த ரூ.4 லட்சம் மர்ம கும்பலிடம் இருந்து தப்பியுள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்திள்ளது.