உள்ளூர் செய்திகள் (District)

வள்ளலார் அவதார தினம் அன்பும், சகோதரத்துவமும் நிலவட்டும்- அண்ணாமலை

Published On 2024-10-05 09:30 GMT   |   Update On 2024-10-05 09:30 GMT
  • ஆன்மீக விழிப்புணர்வு வாயிலாக, சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களையமுடியும் என்பதை உணர்ந்தவர்.
  • அவர் உருவாக்கிய வடலூர் சத்திய ஞான சபை, இன்றும் தினமும் லட்சக்கணக்கான மக்களின் பசியாற்றி வருகிறது.

சென்னை:

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

அன்பையே தெய்வ வடிவாகக் கண்டு, அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்துவதன் மூலம் இறைவனை அடையலாம் என, ஜீவகாருண்யத்தையும், ஆன்மீகத்தையும் ஊட்டி வளர்த்த சிறந்த முருக பக்தரான வள்ளலார் பெருமான் அவதார தினம் இன்று. பிறப்பினால் ஏற்படும் ஜாதி சமூக வேறுபாடுகள் அர்த்தமற்றவை என்று குறிப்பிட்டதோடு ஆன்மீக விழிப்புணர்வு வாயிலாக, சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களையமுடியும் என்பதை உணர்ந்தவர்.

பசித்தவர்களுக்குச் சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளிப்பதற்காக அவர் உருவாக்கிய வடலூர் சத்திய ஞான சபை, இன்றும் தினமும் லட்சக்கணக்கான மக்களின் பசியாற்றி வருகிறது. சமூகத்தில் அன்பு மற்றும் சகோதரத்துவம் நிலவ வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே வாழ்ந்த திருவருட்பிரகாச வள்ளலார் பெருமானைப் போற்றி வணங்குவோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News