உள்ளூர் செய்திகள்
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை ரூ.7 குறைந்தது
- கறிக்கோழி விலை குறைக்கப்பட்டு கிலோ ரூ.106 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
- முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக இருந்து வந்தது. அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் அதிக அளவில் கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கறிக்கோழி கிலோ ரூ.113-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் அதன் தேவை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
பின்னர் கறிக்கோழி விலையை மேலும் ரூ.7 குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கறிக்கோழி விலை குறைக்கப்பட்டு கிலோ ரூ.106 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
முட்டை கோழி கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மாற்றம் செய்யப்படவில்லை. மேலும் முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக இருந்து வந்தது. அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.