உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் வன்முறை குறித்து பள்ளி நிர்வாகிகளிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த திட்டம்

Published On 2022-07-25 04:47 GMT   |   Update On 2022-07-25 04:47 GMT
  • பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன் ஆசிரியைகள் உள்ளிட்ட 5 பேரை, கடந்த 17-ந் தேதி போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
  • கைதான 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டதையொட்டி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சின்னசேலம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார்.

இதையடுத்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. அதன்பின்னர் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன் ஆசிரியைகள் உள்ளிட்ட 5 பேரை, கடந்த 17-ந் தேதி போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கைதான 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டதையொட்டி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்குவிசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு குழுவினரும், சி.பி.சி.ஐ.டி.,போலீசாரும் பள்ளியில் தினமும் ஆய்வு மற்றும் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சிறையில் உள்ள பள்ளி நிர்வாகத்தினரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

Tags:    

Similar News