அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் அறிக்கை
- கல்வித் தகுதி 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி, ஆண்களுக்கு வயது உச்ச வரம்பு 40. பெண்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை.
- கட்டணமில்லா பயிற்சி உதவித்தொகை மாதந்தோறும் ரூ.750/- பயிற்சியில் சேரும் அனைவருக்கும் விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், சைக்கிள், காலணி ஆகியவை வழங்கப்படும் பயிற்சியின் போது தொழிற்சாலைகளில் பயிற்சி அளிக்கப்படும்.
சென்னை:
சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி, கிண்டி (மகளிர்), திருவான்மியூர், வடசென்னை மற்றும் ஆர்.கேநகர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவதற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி, ஆண்களுக்கு வயது உச்ச வரம்பு 40. பெண்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை
கட்டணமில்லா பயிற்சி உதவித்தொகை மாதந்தோறும் ரூ.750/- பயிற்சியில் சேரும் அனைவருக்கும் விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், சைக்கிள், காலணி ஆகியவை வழங்கப்படும் பயிற்சியின் போது தொழிற்சாலைகளில் பயிற்சி அளிக்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.07.2022 விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரி www.skilltraining.tn.gov.in ஆகும். மேலும், அருகாமையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயல்படும் சேர்க்கை உதவி மையத்தை அணுகியும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.