உள்ளூர் செய்திகள்
ஆட்டோ டிரைவரை கொன்றவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை- கோர்ட்டு உத்தரவு
- கடந்த 2010-ம் ஆண்டு அமைந்தகரை, மாங்காளி அம்மன் கோவில் அருகே சவாரி ஏற்றுவது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் கருணாநிதியுடன் தகராறு ஏற்பட்டது.
- இந்த மோதலில் செல்வக்குமார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாநிதியை கைது செய்தனர்.
சென்னை:
சென்னை, செனாய் நகர் வேம்புலியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது28). ஆட்டோ டிரைவர்.
கடந்த 2010-ம் ஆண்டு அமைந்தகரை, மாங்காளி அம்மன் கோவில் அருகே சவாரி ஏற்றுவது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் கருணாநிதியுடன் தகராறு ஏற்பட்டது.
இந்த மோதலில் செல்வக்குமார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாநிதியை கைது செய்தனர்.
இதுதொடர்பாக வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி கருணாநிதிக்கு 10 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.