கீழ்ப்பாக்கம் பகுதியில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
- பிரதான குழாயில் மதகு வால்வு பொருத்தும் பணி மற்றும் இணைப்புப் பணி 30-ந்தேதி காலை 8 மணி முதல் 31-ந்தேதி இரவு 8 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.
- அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள தலைமை அலுவலக புகார் பிரிவு தொலைபேசி எண்.044-45674567-ல் தொடர்பு கொள்ளலாம்.
சென்னை:
கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் 1200 மி.மீ விட்டமுள்ள உந்து பிரதான குழாயில் மதகு வால்வு பொருத்தும் பணி மற்றும் இணைப்புப் பணி 30-ந்தேதி காலை 8 மணி முதல் 31-ந்தேதி இரவு 8 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் கீழ்ப்பாக்கம் பகுதிக்குட்பட்ட வேப்பேரி, பெரியமேடு, பூங்காக்கள், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கொண்டித்தோப்பு, சவுகார்பேட்டை, ஏழு கிணறு, ஜார்ஜ் டவுன், பிராட்வே, திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை, பெரம்பூர், புளியந்தோப்பு, நம்மாழ்வார்பேட்டை, புரசைவாக்கம், செம்பியம், ஓட்டேரி, கெல்லீஸ், அயனாவரம், கீழ்ப்பாக்கம் தோட்டம், சேத்துப்பட்டு, டி.பி.சத்திரம், வில்லிவாக்கம் மற்றும் நுங்கம்பாக்கம், தியாகராயநகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு குழாயின் மூலமாக வழங்கும் குடிநீர் விநியோகம் 2 நாட்கள் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள தலைமை அலுவலக புகார் பிரிவு தொலைபேசி எண்.044-45674567-ல் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.