உள்ளூர் செய்திகள்

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் கிடந்த தங்க செயினை போலீசில் ஒப்படைத்த துப்புரவு ஊழியர்

Published On 2023-04-25 07:30 GMT   |   Update On 2023-04-25 07:30 GMT
  • தூய்மை பணியாளர் செந்தாமரையை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
  • ரெயில் நிலையத்தில் தங்க செயினை தவறவிட்டவர்கள் முறையான ஆவணத்துடன் ரெயில்வே போலீசாரை அணுகினால் அதனை ஒப்படைக்க தயாராக உள்ளனர்.

சென்னை:

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் 8 மற்றும் 9-ல் வ.உ.சி.நகரை சேர்ந்த துப்புரவு பெண் ஊழியர் செந்தாமரை தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது பிளாட் பாரத்தில் ஒரு செயின் கிடந்ததை கண்டு எடுத்தார். அது தங்க செயின் என தெரிய வந்தது. அதனை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மார்க்கபந்துவிடம் ஒப்படைத்தார்.

தங்க செயினின் எடை 32 கிராம் ஆகும். 4 பவுன் செயினை பயணி யாரோ தவறவிட்டு சென்று விட்டுள்ளார். அவற்றின் தற்போதைய மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதுபற்றி ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தங்க செயினை நேர்மையாக எடுத்துக்கொடுத்த தூய்மை பணியாளர் செந்தாமரையை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

செயினை தவறவிட்ட பயணி யார் என்று கண்டு பிடித்து அவர்களிடம் ஒப்படைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரெயில் நிலையத்தில் தங்க செயினை தவறவிட்டவர்கள் முறையான ஆவணத்துடன் ரெயில்வே போலீசாரை அணுகினால் அதனை ஒப்படைக்க தயாராக உள்ளனர்.

Tags:    

Similar News