உள்ளூர் செய்திகள்

அவதூறாக பேசிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

Published On 2022-12-22 10:16 GMT   |   Update On 2022-12-22 10:16 GMT
  • ராமதுரை தரப்பில் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
  • வழக்கின் விசாரணை முடிவில் பாதிக்கப்பட்டவருக்கு இன்ஸ்பெக்டர் ஆனந்தன் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

சேலம்:

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2018-ம் ஆண்டு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆனந்தன். இவர் கொளகூர் பகுதியை சேர்ந்த ராமதுரை என்பவரின் நிலப்பிரச்சனை தொடர்பாக விசாரணை நடத்த சென்றார். அப்போது ராமதுரையை சமூகத்தை குறிப்பிட்டு தரகுறைவாக, பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி ராமதுரை தரப்பில் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிவில் பாதிக்கப்பட்டவருக்கு இன்ஸ்பெக்டர் ஆனந்தன் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. இந்த இழப்பீடு தொகையை அரசு உள்துறை முதன்மைச் செயலாளர் வழங்கவேண்டும் என்றும், அந்த தொகையை ஆய்வாளரிடம் இருந்து வசூல் செய்துகொள்ள வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News