ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை- கேரளாவை சேர்ந்தவர் கைது
- இளம்பெண் பயணம் செய்த பெட்டியில் அவருடைய இருக்கை அருகே இருந்த நபர் கல்லூரி மாணவியிடம் ’செக்ஸ்’ சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
- இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் திருப்பூர் ரெயில் நிலையம் வந்ததும், ரெயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்:
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 19 வயதுஇளம்பெண் கர்நாடகாவில் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று கர்நாடகாவில் இருந்து கோழிக்கோட்டுக்கு யஷ்வந்த்பூர்-கண்ணூர் விரைவு ரெயிலில் சென்று கொண்டிருந்தார். அந்த ரெயில் சம்பவத்தன்று நள்ளிரவு 2மணிக்கு ஈரோட்டில் இருந்து திருப்பூர் வந்து கொண்டிருந்தது.
அப்போது இளம்பெண் பயணம் செய்த பெட்டியில் அவருடைய இருக்கை அருகே இருந்த நபர் கல்லூரி மாணவியிடம் 'செக்ஸ்' சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் திருப்பூர் ரெயில் நிலையம் வந்ததும், ரெயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
அதன் பேரில் போலீசார் கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் புலக்காட்டுக்காரா பகுதியை சேர்ந்த ஜியோ ஜார்ஜ் (வயது 39) என்பது தெரியவந்தது. பெங்களூரில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
மேலும் அவர் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து திருப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.