ரோட்டோரம் கொட்டப்பட்ட மருந்து குவியல்- பொதுமக்கள் அச்சம்
- முட்புதரில் பெட்டி, பெட்டியாக ஆங்கில மருத்து கொட்டப்பட்டுள்ளது.
- தனியார் மருந்து விநியோக நிறுவனம் சார்பில் இப்படி கொட்டப்பட்டதா என தெரியவில்லை.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன், ஈங்கூர் ஊராட்சி, சிப்காட் பொது சுத்திரிப்பு நிலையம் அருகே குட்டப் பாளையத்தில் இருந்து குமாரபாளையம் செல்லும் ரோட்டின் ஓரத்தில் முட்புதரில் பெட்டி, பெட்டியாக ஆங்கில மருத்து கொட்டப்பட்டுள்ளது.
இது ஒரே இடத்தில் இல்லாமல் விட்டு, விட்டு 4 இடங்களில் கொண்டப்பட்டுள்ளது. இதில் பாதி மருந்துகள் காலவதியானது. மீதி மருந்துகள் இன்னும் காலாவதி தேதி உள்ளது. இது அரசு மருத்துவனைக்கு வழங்கப்பட்டதா அல்லது ஈ.எஸ்.ஐ. மருத்துவ மனைக்கு அரசால் வழங்கப்பட்டதா அல்லது தனியார் மருந்து விநியோக நிறுவனம் சார்பில் இப்படி கொட்டப்பட்டதா என தெரியவில்லை.
இதை இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர். பள்ளி விடுமுறை தினமாக உள்ளதால் அப்பகுதி சிறுவர்கள் இந்த மருந்து பற்றி அறியாமல் எடுத்து விளையாடி வருகின்றனர்.
இந்த மருந்துகள் எதற்காக இங்கு கொட்டப்பட்டது. இதை யார் கொண்டு வந்து கொட்டியது என அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் இந்த பகுதியில் சாய ஆலை கழிவு நீரால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதி, இங்கு எதற்காக கொட்டப்பட்டது என மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.