தொலைநோக்கு சிந்தனையுடன் முதலமைச்சர் ஆட்சி செய்து வருகிறார்- அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு
- சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
- பெண் கல்வி உயர்வதற்கு கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் ஒரு முதலமைச்சரை நாம் பெற்றிருக்கிறோம்.
செஞ்சி:
விழுப்புரம் வடக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி செஞ்சி ஒன்றியம் அப்பம்பட்டில் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சையத் உஸ்மான் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கின்ற வகையில் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம், என சம அந்தஸ்துடன் சம நிலைக்கு சகோதரத்துடன் எல்லோருக்கும் எல்லாம் இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் ஆட்சி செய்து வருகின்றார்.
அந்த வகையில் பெண் கல்வி உயர்வதற்கு கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் ஒரு முதலமைச்சரை நாம் பெற்றிருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழுதலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், செஞ்சி வட்ட ஜமாத் தலைவர் சையத் மஸ்ஜித் பாபு, விவசாய சங்க மாதவன், விடுதலை சிறுத்தைகள் நன்மாறன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிருந்தா, காரைஅய்யனார் மற்றும் இஸ்லாமியர்கள் கூட்டணி கட்சியினர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.