உள்ளூர் செய்திகள்

நீர்த்தேக்க தொட்டியை பராமரித்து தேசியக்கொடி போன்று வர்ணம் பூசிய ஊராட்சி தலைவர்- பாராட்டு குவிகிறது

Published On 2023-06-30 03:51 GMT   |   Update On 2023-06-30 03:51 GMT
  • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 2016-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடையது.
  • தொட்டியின் மீது போஸ்டர்களை ஒட்டி அசுத்தப்படுத்துவது குறையும்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் ஊராட்சியில் வீரசேகரன் (வயது 32) என்பவர் ஊராட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், ஆதிரங்கம் ஊராட்சியில் 6 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. அதில், ஆதிரங்கம் தர்கா எதிரே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து காணப்பட்டது. இந்த தொட்டி அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வீரசேகரன் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு தொட்டியை சுத்தம் செய்தார். அதுமட்டுமின்றி, அந்த தொட்டிக்கு இந்திய தேசியக்கொடி போன்று வர்ணம் பூசியுள்ளார்.

இது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் ஊராட்சி தலைவரை பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து, ஊராட்சி தலைவர் வீரசேகரன் கூறியதாவது:-

இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 2016-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடையது. இது பழுதான நிலையில் இதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையிலும், அதனை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை பொதுமக்களுக்கு உருவாக்கவும் 75-வது சுதந்திர தினம் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் நினைவாக தேசியக்கொடியை போன்று வர்ணம் பூசப்பட்டது.

இதன்மூலம், தொட்டியின் மீது போஸ்டர்களை ஒட்டி அசுத்தப்படுத்துவது குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News