உள்ளூர் செய்திகள் (District)

பா.ம.க.வினர் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-11-11 09:18 GMT   |   Update On 2023-11-11 09:18 GMT
  • சிறப்பு அதிகாரிகள் நியமித்துள்ளது.
  • அறிவுசார் நகரம் அமைதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே 1703 ஏக்கர் நில பரப்பில் அறிவுசார் நகரம் அமைப்பதை எதிர்த்து பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல் மாளிகைப்பட்டு, செங்காத்தாகுளம், எர்ணாகுப்பம், வெங்கல் ஆகிய கிராமங்கள் உள்ளடக்கி 1703 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தமிழ்நாடு அரசு அறிவுசார் நகரம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக பூர்வாங்க பணிகளை தொடங்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. சிறப்பு அதிகாரிகள் நியமித்துள்ளது. அறிவுசார் நகரம் அமைத்தால் மூன்று போகங்கள் விளையக்கூடிய விலை நிலங்கள், வீடுகள் பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளது. அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், திட்டத்தை எதிர்த்தும் கண்டித்தும் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் எதிரே நேற்று கண்டனம் ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர். திருவள்ளூர் வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் தனசேகர், இளைஞர் அணி தலைவர் அன்பு, விவசாய சங்கத் தலைவர் முனுசாமி, ஒன்றிய செயலாளர் ஜெயபால், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சுதாகர், வன்னியர் சங்க செயலாளர் டில்லிபாபு, ஆவாஜி பேட்டை பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவுசார் நகரம் அமைத்தால் பாதிப்பு அடைவோர் மற்றும் ஏராளமான பா.ம.க. வினர் திருவோடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அறிவுசார் நகரம் அமைதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News