உள்ளூர் செய்திகள்
மத்திய சென்னை மேற்கு மாவட்ட தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் நியமனம்- பிரேமலதா அறிவிப்பு
- தே.மு.தி.க. மத்திய சென்னை மேற்கு மாவட்டத்துக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்.
- தொண்டர் அணி செயலாளராக வெங்கடேசன், துணை செயலாளர்களாக ராஜேந்திரன், ராமர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
தே.மு.தி.க. மத்திய சென்னை மேற்கு மாவட்டத்துக்கு புதிய நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் இ.ஆர்.எஸ். பிரபாகரன் பரிந்துரையின் பேரில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ளார்.
இளைஞர் அணி செயலாளராக குலசேகரன், துணை செயலாளராக சிவா, மோகன், கேப்டன் மன்ற செயலாளராக தனசேகரன், துணை செயலாளர்களாக பாஸ்கர், கலைமணி, கிருஷ்ணமூர்த்தி, மகளிர் அணி செயலாளராக சல்லத்மேரி, துணை செயலாளர்களாக ஷியாமா சிவஸ்ரீ, பாலகுமாரி, மாணவர் அணி செயலாளராக பாபு, துணைச் செயலாளர்களாக ஆகாஷ், பாலாஜி, வழக்கறிஞர் அணி செயலாளராக பரமசிவம், துணைச் செயலாளர்களாக பூமாலை, கவிநிலா, சமூக வலைதள அணி செயலாளராக முனிராஜன், துணைச் செயலாளர்களாக இளையராஜ், ஹரிகரன், தொண்டர் அணி செயலாளராக வெங்கடேசன், துணை செயலாளர்களாக ராஜேந்திரன், ராமர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.