உள்ளூர் செய்திகள் (District)

பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்திய முகமூடி கொள்ளை கும்பல் சிக்கியது

Published On 2024-09-20 09:03 GMT   |   Update On 2024-09-20 09:03 GMT
  • கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
  • எஸ்.பி.யின் உத்தரவு கொள்ளையர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், தாராபுரம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது. முகமூடி அணிந்து கையில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் தவித்தனர்.

இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் துப்பாக்கியுடன் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட போலீசாருக்கு திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் இரவு முழுவதும் துப்பாக்கியுடன் ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். கொள்ளையர்கள் தப்பியோடும் பட்சத்தில் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டது. எஸ்.பி.யின் இந்த உத்தரவு கொள்ளையர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் தனிப்படை போலீசார் விசாரணையில் முகமூடி கொள்ளையர்கள் சிக்கினர். அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News