உள்ளூர் செய்திகள்

ஓ.பி.எஸ். மாநாட்டுக்கு அழைத்தால் பங்கேற்பது பற்றி முடிவெடுப்பேன்- சசிகலா பேட்டி

Published On 2023-04-14 05:57 GMT   |   Update On 2023-04-14 09:18 GMT
  • ஓ.பி.எஸ். விவகாரத்தில் சட்டசபையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகின்றனர்.
  • தேர்தல் காலங்களில் எதிர்கட்சி என்பதை வெளிப்படுத்தி மக்களிடம் ஆதரவு கேட்போம்.

சென்னை:

சசிகலா தி.நகரில் உள்ள இல்லத்தில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. உட்கட்சி பூசலை தி.மு.க. பயன்படுத்தி வருகிறது. அனைவரும் ஒன்று சேர கூடாது என தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

ஓ.பி.எஸ். தீர்மானம் குறித்து பேசுகிறார். உடனடியாக அ.தி.மு.க.வை சார்ந்த நபர்கள் எப்படி பேச விடலாம் என கேட்கின்றனர். அதற்கு சபாநாயகர் முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில்தான் பேச சொன்னேன் என கூறினார். அவர் அ.தி.மு.க. அதனால் பேச சொன்னேன் என கூறவில்லை.

தி.மு.க. எப்போதும் இரண்டு வண்டியில் மட்டுமே பயணம் செய்வார்கள். ஓ.பி.எஸ். விவகாரத்தில் சட்டசபையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகின்றனர். தேர்தல் காலங்களில் எதிர்கட்சி என்பதை வெளிப்படுத்தி மக்களிடம் ஆதரவு கேட்போம்.

ஆட்சியை மக்கள் கொடுத்த பின் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். ஆனால் தி.மு.க. ஆட்சி அமைத்தது முதல் ஏதோ சந்தைக்கு போவது போல ஒவ்வொரு நாளையும் நகர்த்தி வருகின்றனர். இதற்கு காரணம் என்ன என்று யோசித்து பார்த்தால் தற்போது உள்ள அரசு சட்டபேரவை என்றால் திரையரங்குக்கு வந்து செல்வது போல வந்து செல்கின்றனர்.

இந்த சண்டையை பெரிதாக்கி பாராளுமன்ற தேர்தலில் வாக்கு சேகரிக்க நினைக்கின்றனர்.

மக்களுக்காக வந்த அரசாக இந்த அரசு தெரியவில்லை. 5 ஆண்டு காலம் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என செய்கின்றனர்.

கொடநாடு வழக்கை தி.மு.க. அரசியலுக்காக பயன்படுத்துகிறது. வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க நேரம் கேட்டால். நிச்சயம் சந்திப்பேன். ஓ.பி.எஸ். மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால், அதன் பின் கலந்து கொள்வது குறித்து முடிவு செய்வேன்.

பாராளுமன்ற தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் பணி முடியும்.

நான் ஜாதி அரசியல் செய்யவில்லை. ஜாதி பார்த்து அரசியல் செய்திருந்தால் ஒரு கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவரை முதல்-அமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன்.

கவர்னர் மோதலை பெரிதாக மாற்றுவதை விட்டு விட்டு எடுத்து கூறி மக்களுக்காக நல்லதை செய்ய வேண்டும். எதிர்கட்சியாக பிரச்சினைகளை சரியான நேரத்தில் எடுத்து சொல்லாமல் உள்ளனர்.

இவ்வாறு சசிகலா கூறினார்.

Tags:    

Similar News