உள்ளூர் செய்திகள்

கருணாநிதி பிறந்த நாளையொட்டி 309 மாணவர்களுக்கு மடிக்கணினி- உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

Published On 2022-06-28 09:04 GMT   |   Update On 2022-06-28 09:04 GMT
  • சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பின்னி மில் மைதானம் அந்தோனியார் சர்ச் அருகில் நடைபெற்றது.
  • தையற்கலை மாணவர்கள் 271 பேருக்கு தையல் இயந்திரங்களையும் கணினி பயின்ற 309 மாணவிகளுக்கு மடிகணினிகளையும் கல்லூரி மாணவர்கள் 500 பேருக்கு ரூ. 5000 வீதம் கல்வி உபகரணங்களையும் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் தொடர் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பின்னி மில் மைதானம் அந்தோனியார் சர்ச் அருகில் நடைபெற்றது.

அமைச்சர் பி.கே சேகர்பாபு முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவனத்தில் பயின்ற தையற்கலை மாணவர்கள் 271 பேருக்கு தையல் இயந்திரங்களையும் கணினி பயின்ற 309 மாணவிகளுக்கு மடிகணினிகளையும் கல்லூரி மாணவர்கள் 500 பேருக்கு ரூ. 5000 வீதம் கல்வி உபகரணங்களையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தயாநிதி மாறன் எம். பி. பர்வீன் சுல்தானா, எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, எ.வெற்றியழகன், ஜோசப் சாமுவேலு மற்றும் பகுதி கழக செயலாளர் எஸ். முரளி, எஸ்.ராஜசேகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகேஷ் குமார்,மண்டல தலைவர்கள் கூ.பி. ஜெயின் சோ வேலு, டி, எஸ்.பி ராஜகோபால், கவுன்சிலர்கள் வே. பரிமளம், பி.ஸ்ரீராமுலு, இசட். ஆசாத், ராஜெஷ் ஜெயின், கே.சரஸ்வதி பகுதி செயலாளர்கள் சுதாகர், முரளிதரன், ஏன், நாகராஜன், டிஎஸ்பி எம்.டி.ஆர் நாகராஜ், செ. தமிழ்வேந்தன், என். சாமி, வே.வாசு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் டி.வி செம்மொழி, எம், விஜயகுமார், மாவட்ட பிரதிநிதிகள் டீ. தம்பிதுரை, ஜி.பாலாஜி எஸ்.எம் ஹாஜி,எம்.எம். மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பார்த்திபன், கே. கவியரசு ஆகியோர் நன்றி கூறினர்.

Tags:    

Similar News