உள்ளூர் செய்திகள் (District)

சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் உண்ணாவிரதம்

Published On 2023-01-12 09:18 GMT   |   Update On 2023-01-12 09:18 GMT
  • நிலம் கையகப்படுத்தப்பட்டால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கவேண்டும்.
  • ஏக்கருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

சேத்தியாதோப்பு:

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, அம்மன் குப்பம், கரிவெட்டி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாய பெருங்குடிமக்கள் என்.எல்.சி. நிர்வாகம் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர்.

அப்படியே நிலம் கையகப்படுத்தப்பட்டால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கவேண்டும். ஏக்கருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதற்கு மாவட்ட நிர்வாகம் சம்மதிக்கவில்லை. இதுகுறித்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

எனினும் என்.எல்.சி. அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் முத்தரவு பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளின் குறைகளை கேட்டு தீர்வு காண வேண்டுமென இன்று வளையமாதேவி பஸ் நிறுத்தம் அருகே விவசாயிகள் ஒன்று திரண்டு ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீஸ் டி.எஸ்பி. ரூபன்குமார், இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக உள்ளது.

Tags:    

Similar News