உள்ளூர் செய்திகள்
காவேரிப்பட்டணம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரை முட்டி தள்ளிய காட்டுயானை
- காவேரிப்பட்டணம் அருகே சப்பானிப்பட்டி பகுதிக்கு அந்த யானைகளை விரட்டி வந்தனர்.
- யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் இருந்து 2 காட்டுயானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதிக்கு இன்றுகாலை சென்றது.
அங்கு ஒருவரை யானை காலால் மிதித்து கொன்றது. பின்னர் அந்த யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். காவேரிப்பட்டணம் அருகே சப்பானிப்பட்டி பகுதிக்கு அந்த யானைகளை விரட்டி வந்தனர்.
அப்போது தருமபுரி-கிருஷ்ணகிரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பதி என்பவர் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அந்த வழியாக வந்த காட்டுயானைகள் காரை முட்டி தள்ளியது. காரின் முன்பகுதியை சேதமாக்கியது. இதில் நல்வாய்ப்பாக காரில் இருந்தவர்கள் உயிர்தப்பினர்.
பின்னர் அந்த யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.