உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரையில் டாஸ்மார்க் ஊழியர்கள் நள்ளிரவில் திடீர் கைது

Published On 2025-01-26 13:18 IST   |   Update On 2025-01-26 13:18:00 IST
  • ஊத்தங்கரையில் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
  • கைது செய்யப்பட்ட நபர்கள் ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் கடை விற்பனையாளர்கள் கடை முடித்து கணக்கு வழக்குகளை ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பும் வேலையில் ஊத்தங்கரை போலீஸாரால் திடீரென கைது செய்யப்பட்டு ஊத்தங்கரை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தின் முன்பு சம்பள உயர்வு பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த இருந்த நிலையில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஊழியர்கள் பஸ்கள் மூலமாக சென்னைக்கு செல்ல முற்பட்டனர்.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். அப்பொழுது டாஸ்மார்க் ஊழியர் அண்ணாமலை என்பவர் உரிமைகளுக்காக போராட சென்னையில் ஒன்றுகூட இருந்த டாஸ்மாக் ஊழியர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து உள்ளதாக கூறுகின்றனர்.

எங்களது உரிமைகளை மீட்க கூட எங்களுக்கு ஏன் அனுமதி அளிக்க மறுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

கைதானவர்களில் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக மாத்திரை கூட எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் போலீசார் கைது செய்துள்ளதாக குற்றம் சாட்டினர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களுக்கு போலீசாரால் சார்பில் குடிநீர், உணவு ஏதும் வழங்காமல் பனிக்காலத்தில் தவிக்க விட்டதாகவும் இதனால் உடல் நலம் பாதிப்பு ஏற்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

Tags:    

Similar News