உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் காதில் பூ வைத்து நூதன ஆர்ப்பாட்டம்

Published On 2024-09-25 10:50 GMT   |   Update On 2024-09-25 10:50 GMT
  • ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த 11 வருடங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
  • ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக அறிவித்த அரசாணை 177-ஐ நிறைவேற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் காதில் பூ வைத்து நூதன ஆர்ப்பாட்டம்ஈரோடு:

பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர்கள் தகுதித்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இதுவரை ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்படவில்லை.

இதற்கிடையே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்தது. இந்த முறையை கைவிட வலியுறுத்தி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த 11 வருடங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நியமனத்தேர்வு அரசாணை 149-ஐ ரத்து செய்து தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் அளித்த 177-ஐ நடைமுறைப்படுத்தக்கோரி தமிழகத்தில் மண்டல வாரியாக ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் காளைமாட்டு சிலை அருகில் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் காதுகளில் பூ வைத்து நூதன முறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வாழ்வாதாரத்தை காக்க நியமனத்தேர்வு முறை ரத்து செய்ய வேண்டும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக அறிவித்த அரசாணை 177-ஐ நிறைவேற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

Similar News