தாமரைக்குளம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்- எம்.எல்.ஏ. உறுதி
- சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்துள்ளதால் அதன் வழியே சமூக விரோதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர்.
- தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுற்றுச்சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தாமரைக்குளம் சீரமைக்கப்பட்டு திறக்கப்படாமலேயே மீண்டும் சிதிலமடைந்து காணப்படுகிறது.
இந்நிலையில் நாகை எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ் தாமரைக் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள சுற்றுச் சுவரின் ஒரு பகுதி இடிந்துள்ளதால் அதன் வழியே சமூக விரோதிகள் புகுந்து குளத்தை பாழாக்கி வருகின்றனர்.
எனவே அந்த சுவரை கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுற்றுச் சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.
அத்துடன் இதர சீரமைப்புப் பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.ஆய்வின் போது, நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, நகராட்சி ஆணையர், நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.