உள்ளூர் செய்திகள்

கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் - இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா வலியுறுத்தல்

Published On 2023-07-10 08:47 GMT   |   Update On 2023-07-10 08:47 GMT
  • தமிழக அரசு அறிவித்துள்ள பெண்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் 80 சதவீத இந்து பெண்களுக்கு கிடைக்க வாய்பில்லை.
  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தற்காலிக சுகாதார கழிப்பிட வசதி செய்து தரக்கோரி இணை ஆணையர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்துவது எனவும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திருச்செந்தூர்:

இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்செந்தூர் ரெயிலடி ஆனந்த விநாயர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார்.அனுமன் சேனா மாவட்ட தலைவர் தங்கராஜா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச்செயலாளர் ரவிகிருஷ்ணன், மாநில செயலாளர் பாலன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள பெண்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் 80 சதவீத இந்து பெண்களுக்கு கிடைக்க வாய்பில்லை. எனவே இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும், மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தற்காலிக சுகாதார கழிப்பிட வசதி செய்து தரக்கோரி இணை ஆணையர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்துவது எனவும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய துணைத்தலைவர் சக்திகுமார், நகர தலைவர் ரமேஷ், இளைஞர் அணி தலைவர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News