உள்ளூர் செய்திகள்

குளத்தில் செத்து மிதந்து கரை ஓதுங்கிய மீன்களை படத்தில் காணலாம்.

மரக்காணம் அருகே குளத்தில் இறந்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசுகிறது தொற்று நோய் பரவும் அபாயம்

Published On 2023-06-14 06:47 GMT   |   Update On 2023-06-14 06:47 GMT
  • கடந்த மாதங்களில் பெய்த மழையினால் இந்த குளம் நிரம்பியது.
  • குறிப்பாக நன்கு வளர்ந்த நிலையில் இருந்த விரால், ஜிலேபி, கெண்டை போன்ற மீன்கள் இறந்து போயின.

விழுப்புரம்:

மரக்காணம் அருகே கந்தாடு ஊராட்சி முதலியார்பேட்டை கிராமத்தில் ஊருக்கு நடுவில் குளம் உள்ளது. கடந்த மாதங்களில் பெய்த மழையினால் இந்த குளம் நிரம்பியது. இந்த நீரில் பல்வேறு வகையான மீன்கள் தானாகவே வளர்ந்தன. இந்நிலையில் சித்திரை மாதம் கடுமையான வெயில் அடித்தது. சில தினங்களுக்கு முன்பாக சூறாவளி காற்றுடன் வெப்பசலனம் காரணமாக மழை பெய்தது. இதில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக குளத்தில் வளர்ந்திருந்த மீன்கள் இறந்து மிதந்தன.

குறிப்பாக நன்கு வளர்ந்த நிலையில் இருந்த விரால், ஜிலேபி, கெண்டை போன்ற மீன்கள் இறந்து போயின. இவைகள் தண்ணீரில் மிதந்து கரை ஒதுங்கியுள்ளன. இதனால் முதலியார்பேட்டை கிராமம் முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அங்குள்ள வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், கவுன்சிலர்களிடம் பொதுமக்கள் புகார் கொடுத்தனர். இருந்தபோதும் இதுநாள் வரையில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள் அப்புறப்படு த்தப்படவில்லை. இதனால் இக்கிராமத்தில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இறந்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி, குளத்தில் உள்ள நீரை வெளியேற்றி, புதிய நீரை குளத்தில் நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலியார்பேட்டை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News