உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் தனியாக சுற்றி திரிந்த காட்டெருமை கன்றை தாயுடன் சேர்த்த வனத்துறையினர்

Published On 2023-03-22 09:22 GMT   |   Update On 2023-03-22 09:22 GMT
  • 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்ெடருமை விடப்பட்டது
  • தேயிலை தோட்டத்தில் இருந்ததை அறிந்து காட்டெருமை கன்றை அங்கு விரட்டினர்.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் பெருமளவு காட்டெருமை, கரடி போன்ற வன விலங்குகள் அதிக அளவு காணப்படுகிறது.

இந்த வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் உணவு தேடி அடிக்கடி வருவது தற்போது வாடிக்கையாகி விட்டது. கோத்தகிரி காம்பைக்கடை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டெருமை கூட்டம் ஒன்று மேய்ந்து கொண்டு இருந்தது.

அப்போது அந்த கூட்டத்தில் இருந்த காட்டெருமை கன்று ஒன்று வழி தவறி வேறு ஒரு பகுதிக்கும் காட்டு எருமை கூட்டம் வேறு ஒரு பகுதிக்கும் சென்று விட்டது.

மீண்டும் தாயுடன் சேர முடியாமல் இருந்த அந்த காட்டெருமை கன்று அங்கும், இங்குமாய் சுற்றி வந்தது.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக கோத்தகிரி வன சரக வனக்கப்பாளர் சிவாவுக்கு தெரிவித்தனர்.

உடனடியாக அவர் வனவர் விவேகானந்தன், வேட்டை தடுப்பு காவலர் பொன்னமலை, மனித விலங்கு மோதல் காவலர் இன்பரசு ஆகியோர் அந்த காட்டெருமை கன்று இருந்த பகுதிக்கு வந்தனர்.

சுற்று வட்டாரத்தில் ஏதேனும் காட்டெருமை கூட்டம் உள்ளதா என்று ஆராய்ந்தனர். பின் 2 மணி நேரத்திற்கு பிறகு ஒற்றை காட்டெருமை ஒன்று சத்தத்துடன் அங்குள்ள மற்றொரு தேயிலை தோட்டத்தில் இருந்ததை அறிந்து காட்டெருமை கன்றை அங்கு விரட்டினர். கன்றும் துள்ளி குதித்து சென்று தாயுடன் சேர்ந்து கொண்டது.

இதனை அங்கு குடியிருந்த மக்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்ததுடன், வனத்துறையினருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News