உள்ளூர் செய்திகள்
கூடலூரில் நடந்த வாசனை திரவியக் கண்காட்சி நிறைவு
- கண்காட்சியில் சிறப்பாக அரங்கம் அமைத்த வனத் துறைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
- கூடலூா் மற்றும் நெல்லியாளம் நகராட்சிக்கு 3 ஆம் பரிசும் வழங்கப்பட்டது.
ஊட்டி
கூடலூா் மாா்னிங் ஸ்டாா் பள்ளி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய கோடை விழா வாசனை திரவிய கண்காட்சி புதன்கிழமை நிறைவடைந்தது.
நிறைவு விழாவுக்கு கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா தலைமை வகித்தாா்.
கூடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன், நகராட்சி ஆணையா் பிரான்சிஸ் சேவியா், நகா்மன்றத் தலைவா் பரிமளா, துணைத் தலைவா் சிவராஜ், தோட்டக்கலை உதவி இயக்குநா் ஜெயலட்சுமி, கூடலூா் வனச் சரக அலுவலா் ராஜேந்திரன் கூடலூர் நகர செயலிளர் இளஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நிறைவு விழாவில், கண்காட்சியில் சிறப்பாக அரங்கம் அமைத்த வனத் துறைக்கு முதல் பரிசும், தோட்டக்கலைத் துறைக்கு இரண்டாம் பரிசும், கூடலூா் மற்றும் நெல்லியாளம் நகராட்சிக்கு 3 ஆம் பரிசும் வழங்கப்பட்டது.
இதில் பொதுமக்கள், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.