உக்கடம் மார்க்கெட்டில் மீன்கள் விலை குறைந்தது
- மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால் வரத்து அதிகரிப்பு
- ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.700-க்கு விற்பனை
கோவை,
கோவை மாவட்டத்தில் உக்கடம் பகுதியில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான மீன்கள் வரவழைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்ததால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
எனவே உக்கடம் சந்தைக்கு தினமும் 3 டன்கள் மட்டுமே மீன்கள் வந்தன. இதனால் உக்கடம் மார்க்கெட்டில் மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்புவரை ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1000-க்கு விற்பனை ஆனது. இதேபோல பாறை-ரூ.400- க்கு விற்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தமிழகம், கேரளாவில் தற்போது மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வந்து உள்ளது. எனவே மீனவர்கள் மறுபடி யும் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம், கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வந்தததால் கோவை உக்கடம் மார்க்கெட்டுக்கு தினமும் 15 டன் என்ற அளவில் மீன்களின் வரத்து அதிகரித்து உள்ளது.
இதன்கா ரணமாக அங்கு மீன்களின் விலை தற்போது கணிசமாக குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உக்கடம் மீன் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் மீன்களின் விலை விவரம் (ஒரு கிலோ): வஞ்சிரம்-ரூ.700, பாறை-ரூ.200, கருப்பு வாவல்-ரூ.400, வெள்ளை வாவல்-ரூ.600, ஊழி-ரூ.150, மத்தி-ரூ.100, நெத்திலி-ரூ.150, சங்கரா-ரூ.180, செம்மீன்-ரூ.300.