- வயலையொட்டி வசதியாக பாதை அமைக்க இடத்தை கோவிலுக்காக அப்பகுதி மக்கள் கேட்டுள்ளனர்.
- வயலில் இறங்கி அங்கு நடப்பட்டிருந்த நாற்றுகளை சேதப்படுத்தினர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே கொற்கை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). விவசாயி. இவரது வயலையொட்டி பொது கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு செல்லும் பாதை குறுகலாக உள்ளது. இவரது வயலையொட்டி வசதியாக பாதை அமைக்க இடத்தை கோவிலுக்காக அப்பகுதி மக்கள் கேட்டுள்ளனர்.
ஆனால் இடத்தை கொடுக்க கண்ணன் மறுத்துவிட்டார். சம்பவத்தன்று கண்ணன் தனது குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து மொட்டை போட்டுள்ளார்.
இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த கென்னடி, அவரது மனைவி கலையரசி, அவர்களது மகன் சிலம்பரசன் (22), மகள் உஷா மற்றும் சிலர் கண்ணனை திட்டி தாக்கினர்.
மேலும் சிலம்பரசன் தரப்பினர் கண்ணன் வயலில் இறங்கி அங்கு நடப்பட்டிருந்த நாற்றுகளை சேதப்படுத்தினர்.
இதுகுறித்து கண்ணன் மணல்மேடு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.