மகளை கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு வந்த பெற்றோரால் பரபரப்பு
- வீட்டிற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பு குவினாவை தீண்டியது.
- முன்னதாக பாம்புடன் வந்த பெற்றோரால் ஆஸ்பத்திரி வளாகத்தி பரபரப்பு நிலவியது.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த சங்கம் விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன், விவசாயி. இவரது மகள் குவினா (வயது 17 ). இவர் கல்லாகோட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குவினா தனது பெற்றவுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது நள்ளிரவு 12 மணி அளவில் வீட்டிற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பு குவினாவை தீண்டியது. உடனே விழித்துக் கொண்ட மாணவி தனது பெற்றோரை எழுப்பி கூறியுள்ளார்.
துரிதமாக செயல்பட்ட மதியழகன் தனது மகளை கடித்த பாம்பை அடித்து ஒரு பையில் போட்டுக் கொண்டு தனது மகளையும் அழைத்துக் கொண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குவினா இன்று காலை கண்விழித்து தனது பெற்றோர்களிடம் பேசினார். மருத்துவர்கள் கூறும்போது மாணவி அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் ஓரிரு நாளில் வீடு திரும்பலாம் என்றும் கூறினார்கள்.
முன்னதாக பாம்புடன் வந்த பெற்றோரால் ஆஸ்பத்திரி வளாகத்தி பரபரப்பு நிலவியது.