உள்ளூர் செய்திகள்

பல வண்ணங்களில் காட்சியளிக்கும் தில்லை மரம்.

நிறம் மாறும் தில்லை மரங்கள்

Published On 2022-08-02 09:48 GMT   |   Update On 2022-08-02 09:48 GMT
  • முனீஸ்வரன் கோவில் அருகே சாலையின் இருபுறங்களிலும் காணப்படும் தில்லை மரத்தின் இலைகள் வெவ்வேறு வண்ணத்தில் காணப்படும்.
  • ஆரம்பத்தில் பச்சை நிறமாகவும் தொடர்ந்து மஞ்சள், சிகப்பு என பல்வேறு நிறங்களாக மாறி உதிர்ந்து மீண்டும் பசுமை இலைகளாக உருவாகும்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பசுமைமாறா காட்டில் வனவிலங்கு சரணலாயம் அமைந்துள்ளது.இந்த வனவிலங்கு சரணாலயத்தில் புள்ளிமான் ,கலிமா, குதிரை, நரி, குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

ராமர் பாதம் அருகே 150 -க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் அடங்கிய மூலிகை வனமும் உள்ளது. மேலும் கோடியக்கரை செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் உள்ள சன்னாசி முனீஸ்வரன் கோவில் அருகே சாலையின் இருபுறங்களிலும் காணப்படும் தில்லை மரத்தின் இலைகள் வெவ்வேறு வண்ணத்தில் காணப்படும். இந்த மரத்தின் இலைகள் பல கலரில் மாறுவது குறிப்பிட்ட சில பருவத்திலும், சில நாட்களில் மட்டுமே பின்னர் மீண்டும் பசுமைக்கு மாறி விடுகிறது.

சுற்றுலா பயணிகளும் இயற்கை ஆர்வலர்களும்இ ந்த இயற்கை அழகினை சாலை வழியே செல்லும்போது நின்று, பார்த்து ரசித்துச் செல்கின்றனர். இது குறித்து கோடி யக்கரை வனசரகர் அயூப்கான் கூறும்போது: கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் முனிய ப்பன் ஏரி, பழைய லைட் ஹவுஸ் பகுதியில் காணப்படுகிறது.

இந்த மரத்தின் இலைகள் ஆரம்பத்தில் பச்சை நிறமாகவும் தொடர்ந்து மஞ்சள், சிகப்பு என பல்வேறு நிறங்களாக மாறி உதிர்ந்து மீண்டும் பசுமை இலைகளாக உருவாகும். இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரு மாத காலத்திற்குள் நடந்து முடிந்துவிடும். இந்த மாதம் முழுவதும் மட்டுமே இந்த நிறம் மாறும் காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம்.

இந்த மரத்திலிருந்து வெளிப்படும் பால் விஷத்தன்மை உடையது. இந்த பாலானது உடலில் பட்டால் அரிப்புகள் ஏற்பட்டு புண்கள் ஏற்படும். எனவே சுற்றுலாப் பயணிகள் இந்த மரத்தின் அழகை பார்த்து ரசித்தால் மட்டும் போதும். இலைகளை பறித்தோ அதிலுள்ள காய்களை பறித்தோ ஆபத்தை தேடிக் கொள்ளக் கூடாது. மேலும் இந்த தில்லை மரம் பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்க உதவும் மூலப் பொருளாகவும் உள்ளது என்றார்.

Tags:    

Similar News