குமார சுப்பிரமணிய சாமி கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி
- மொடக்குறிச்சி ஒன்றியம் லக்காபுரத்தில் குமார சுப்பிரமணியர் சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்த சஷ்டி சூரசம்காரம், திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி கடந்த 25-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கொடுமுடி:
மொடக்குறிச்சி ஒன்றியம் லக்காபுரத்தில் குமார சுப்பிரமணியர் சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்த சஷ்டி சூரசம்காரம், திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி கடந்த 25-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
கடந்த 26, 27 ஆகிய 2 நாட்கள் யாகசாலை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 28-ந்தேதி கோபூஜை மற்றும் மாலையில் சிவனடியார் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
29-ந்தேதி சிறப்பு பூஜையும், நேற்று சூரசம்காரம் நிகழ்ச்சி, திருமலையை சுற்றி வந்து சிறப்பு பூஜையுடன் நிறைவடைந்தது. சிறப்பு பூஜை முடிவடைந்த உடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று காலை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
குமாரசுப்பிர மணியர் சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்காரம், திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியை விழா குழுவினரும் மற்றும் ஊர் பொதுமக்களும் செய்து இருந்தனர்.