வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் திருமுறை திருவிழா
- திருமுறை புத்தகங்களை யானை வாகனத்தில் வைத்து வீதியுலா காட்சி நடந்தது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேவார பதிகங்கள் பாடி வீதியுலா வந்தனர்.
வேதாரண்யம்,:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி- அம்பாள் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கதவு திறக்க அடைக்க பாடும் வரலாற்று திருவிழா, தேர் திருவிழா, தெப்பத்திருவிழா ஆகியவை சிறப்பாக நடந்து முடிந்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த 12-ந்தேதி இரவு திருவாசகம், திருமந்திரம், சிவபுராணங்கள் அடங்கிய திருமுறை புத்தகங்களை யானை வாகனத்தில் வைத்து, வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா காட்சி நடந்தது.
இதில் கோவில் ஓதுவார் மூர்த்திகள் பரஞ்ஜோதி, திருவாரூா் சந்திரசேகர், முத்துக்குமார், திருசெங்காட்டாங்காடி செல்வமுத்துகுமார், சிவகாசி ரமேஷ், மிருதங்க வித்வான் கடலூர் ராஜேஷ், திருநாவுக்கரசு வார வழிபாட்டு மன்ற ராஜேந்திரன், சச்சிதானந்தம், சேகர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேவார பதிகங்களை இசையுடன் பாடி வீதியுலா வந்தனர்.
ஆங்காங்கே பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.