உள்ளூர் செய்திகள்

கருங்கல் பதிக்கும் நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் ஜீயர் பெரியநம்பி திருமாளிகை கலந்து கொண்டார்.

திருபுவனம் ஸ்ரீரங்கநாத பெருமாள் கோவில் கருங்கல் பதிக்கும் பணி

Published On 2023-02-25 10:30 GMT   |   Update On 2023-02-25 10:30 GMT
  • 1,200 ஆண்டு பழைமையான இந்த கோயில் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
  • சகல சாஸ்திரம், ஆகம விதிமுறைகள்படி கருங்கல் முதல்வரி பதிக்கப்பட்டது.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, சாலியமங்களம் அருகே திருபுவனம் கிராமத்தில் ஸ்ரீரங்கநாதர் பெருமாள் கோயில் உள்ளது 1,200 ஆண்டு பழைமையான இந்த கோயில் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

கோவிலில் முதல்வரி கருங்கல் பதிக்கும் நிகழ்ச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ஜீயர் ஸ்ரீ பெரிய நம்பி திருமாளிகை தலைமையில் திருப்பணி குழுவினர், கிராமவாசிகள் முன்னிலையில் நடைபெற்றது.

முன்னதாக கருங்கல் உபய பீடத்திற்கு அடியில் வெள்ளி காசு, தங்க காசு, நவரத்தினங்கள், துளசி, நொச்சி. ஆழம் கொழுந்து, வேப்ப கொழுந்து, அரச கொழுந்து. பாதரசம், நாணயங்கள், வைக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள். சகல சாஸ்திரம், ஆகம விதிமுறைகள்படி கருங்கல் முதல்வரி பதிக்கப்பட்டது

இதில் இதில் தமிழ்நாடு அரசு சமூக நீதி கண்காணிப்பு குழு உறுப்பினர் ராஜேந்திரன், பூண்டி கல்லூரி பேராசிரியர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள், திருப்பணி குழுவினர், கிராமவாசிகள், மற்றும் சுற்றுப்பகுதி கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News