உள்ளூர் செய்திகள்

திருத்துறைப்பூண்டியில் இருந்து அகஸ்தியம்பள்ளிக்கு சோதனை ஓட்டமாக புறப்பட்ட ரெயில்.

திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்

Published On 2023-10-17 09:58 GMT   |   Update On 2023-10-17 10:24 GMT
  • 37 கி.மீட்டர் தூரம் உள்ள அகஸ்தியம்பள்ளிக்கு ரெயில் புறப்பட்டது.
  • சுமார் 90 கி.மீட்டர் வேகத்தில் ரெயில் சென்றது.

திருத்துறைப்பூண்டி,:

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி- நாகப்பட்டினம் மாவட்டம், அகஸ்தியம்பள்ளி இடையே மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி நிறைவு பெற்றது.

இதனை அடுத்து அகஸ்தியம்பள்ளியில் இருந்து வேதாரண்யம், தோப்புத்துறை, நெய்விளக்கு, குறவப்புலம், கரியாபட்டினம் ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக திருத்துறைப்பூண்டிக்கு கடந்த ஏப்ரல் மாதம் இந்த பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது.

சனி, ஞாயிற்று கிழமைகளை தவிர, மற்ற 5 நாட்களிலும் இந்த ரெயில் சேவை காலை, மாலை என 2 வேளைகளில் இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி ரெயில் பாதையின் தண்டவா ளத்தின் உறுதித்தன்மை மற்றும் தண்டவாள அதிர்வுகளை ஆய்வு செய்திடும் ஓ.எம்.எஸ் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் இன்று காலை நடந்தது.

முன்னதாக காலை 10.45 மணிக்கு திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் இருந்து 37 கி.மீட்டர் தூரம் உள்ள அகஸ்தியம்பள்ளிக்கு ரெயில் புறப்பட்டது.

சுமார் 90 கி.மீட்டர் வேகத்தில் சென்ற ரெயில் காலை 11.15 மணிக்கு அகஸ்தியம்பள்ளி சென்றடைந்தது. இந்த ரெயிலில் ரெயில்வே அதிகாரிகள் பலர் பயணம் செய்தனர்.

Tags:    

Similar News